20 Mar 2013

திருமணம்-தடையின்றி-இனிதே-நடைபெற-உதவும்-பதிகம்


திருமணம் தடையின்றி இனிதே நடைபெற உதவும் பதிகம்
(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)
திருக்குறுந்தொகை                                                 5-ம் திருமுறை



      காவிரி வடகரைத்தலம் அறுபத்தி மூன்றில் இருபத்தைந்தாவது தலம் திருமணஞ்சேரி திருத்தலம் ஆகும். திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆகியோர் பாடல் பெற்றது. இதனைக் கீழைத் திருமணஞ்சேரி என்பர். மன்மதன் பூசித்துப் பேறு பெற்ற தலம். ஆமை வழிபட்டது. ஈசன், உமாதேவியைத் திருமணம் செய்த தலம்.




     திருமணஞ்சேரி திருத்தலத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நிதி மிக விசேடம். திருமணம் ஆகாது தாமதப்படும் அல்லது தடைப்படும் ஆண் பெண் இருபாலரும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுக் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் அடைந்து வருவது இன்றும் கண்கூடாகக் காணும் விசேடமாகும். இந்தத்தல ஐதீகமே இத்திருப்பதிகப் பயனுக்குத் தக்க சான்றாகும்.



திருச்சிற்றம்பலம்

          1. பட்ட நெற்றியர் பாய்புலித் தோலிவினர்
            நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
            சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரிஎம்
            வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.


    சிவபெருமான், நெற்றியில் பட்டம் அணிந்து விளங்குபவர்ளூ புலித்தோலை உடுத்தியவர்ளூ நின்று மேவி திருநடனம் புரிபவர்ளூ முனிவர்கள் நாள்தோறும் ஏத்தி வழிபடுகின்ற செல்வம் திகழும் திருமணஞ்சேரியில், நீண்ட சடையைக் கொண்டை போல் சேர்த்து அழகு பொலிய விளங்குபவர். அப்பெருமானுடைய அருளாகிய எழில் வண்ணத்தை வாழ்த்துவோமாக!



          2. துன்னு வார்குழ லாள்உமை யாளொடும்
            பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
            மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
            உன்னு வார்வினை யாயின ஓயுமே.

     பின்னிய நீண்ட கூந்தலையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், சடைமுடியின் மேல் பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் சிறப்புடன் திகழும் திருமணஞ்சேரியில் அமுதமாகத் திகழ்பவர். அவரை நினைத்து ஏத்தும் அடியவர்களுடைய வினை யாவும் தீரும்.



          3. புற்றில் ஆடரவு ஆட்டும் புனிதனார்
            தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
            சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
            பற்றி னார்அவர் பற்றவர் காண்மினே.

     புற்றில் வாழும் அரவத்தை ஆபரணமாக அணிந்து ஆட்டுகின்ற புனிதராகிய சிவபெருமான், மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கி அழித்தவர். அப்பெருமான், நாற்புறமும் மதில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர். அவர் தன்னை உள்ளத்தில் பதித்துப் பற்றாகி மேவும் அடியவர்களைப் பற்றி இருந்து அருள் செய்யும் பெருமான் ஆவார்.



          4. மத்த மும்மதியும் வளர் செஞ்சடை
            முத்தர் முக்கணர் மூசுஅர வம்அணி
            சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரிஎம்
            வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

     சிவபெருமான், ஊமத்த மலரும், பிறைச் சநதிரனும் செஞ்சடையில் தரிதத்தவர்ளூ உலகப் பற்று நீங்கிய மெய்யடியவர்களுக்கு முத்திப் பேற்றினை அளிப்பவர்ளூ சூரியனை வலக் கண்ணாகவும், சந்திரனை இடக் கண்ணாகவும், அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் கொண்ட முக்கண்ணர்ளூ உடலில் தவழுமாறு பாம்பை அணிந்துள்ளவர்ளூ சித்தராகத் திகழ்பவர்ளூ நெருப்புப் போன்ற சிவந்தமேனி வண்ணம் உடையவர். அப்பெருமான், சீர் மிகுந்த திருமணஞ்சேரியில், அறிவின் களஞ்சியமாக விளங்குபராகித் தம்மை விரும்பும் அடியவர்களுக்கு விரும்பும் தலைவராகி அருள் புரிபவர்.





          5. துள்ளு மான்மறி தூமழு வாளினர்
            வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
            அள்ளல் ஆர்வயல் சூழ்மணஞ் சேரிஎம்
            வள்ள லார்கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

  சிவபெருமான், மான் கன்றும் மழுப்படையும் கையில் ஏந்தியவர்ளூ கங்கையைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப்பெருமான்,  யவா ன்கு விளங்கும் வயல்வளம் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் வள்ளல். அவர்தம் திருக்கழலை வாழ்த்துதலே, இப்பிறவியில் நன்கு வாழும் வாழ்க்கை என்பதாகும்.



          6. நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்
            ஊர் பரந்த உரகம் அணிபவர்;
            சீர் பரந்த திருமணஞ் சேரியார்
            ஏர் பரந்தங்கு இலங்கு சூலத்தரே.

        சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் கொண்டு ஊhந்து செல்லும் பாம்பை ஆபரணமாகத் திருமேனியில் அணிந்துள்ளவர். அவர், சிறப்பு மிக்க திருமணஞ்சேரியில் பெருமையுடன் சூலப்படை யுடையவராய் விளங்கும் ஈசன் ஆவார்.



          7. சுண்ணத் தர்சுடு நீறுகந்து ஆடலார்
            விண்ணத் தம்மதி சூடிய வேதியர்;
            மண்ணத் தம்முழவு ஆர்மணஞ் சேரியர்
            வண்ணத் தம்முலை யாள்உமை வண்ணரே.

       சிவபெருமான், திருவெண்ணீற்றைத் திரு மேனியில் பூசி விளங்;குபவர்ளூ சாம்பலை உகந்து ஆட வல்லவர்ளூ விண்ணில் தவழும் சந்திரனைச் சூடியவர்ளூ வேதங்களை விரித்து ஓதியவர். பூவுலகத்தில் முரசு ஒலிக்கும் திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அப்பெருமான் வண்ணம் திகழும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.



          8. துன்ன ஆடையர் தூமழு வாளினர்
            பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
            மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரிஎம்
            மன்ன னார்கழலே தொழ வாய்க்குமே.

      சிவபெருமான், தைத்த கோவணத்தை ஆடையாக உடுத்தியவர்ளூ மழுப்படை யுடையவர்ளூ பின்னி அழகுபடுத்திய சிவந்த சடைமுடியின் மீது, பிறைச் சந்திரனை வைத்தவர்ளூ சிறப்பான பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் விளங்கும் பெருமைக்கு உரியவர். அப்பரமனின் திருக்கழலைத் தொழுது ஏத்த எனக்குப் பேறு கிடைத்தது.



          9. சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
            பத்தர் சேர்அமண் கையர் புகழவே
            மத்தர் தாம்அறியார் மணஞ் சேரிஎம்
            அத்த னார்அடியார்க்கு அல்லல் இல்லையே.

      சித்தர்கள், தேவர்கள், திருமால் மற்றும் நான்முகன்ஆகியவர்களுடன் புத்தரும் சமணரும் புகழ்ந்து ஏத்தவும் அத்தகையோர்க்கு, அறிய முடியாதவராகித் திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர் ஈசன். அன்புக்கு எழியவராகிய அப்பரமனின் அடியவர்களுக்கு, அல்லல் என்பது இல்லை.



         10. கடுத்த மேனி யரக்கன் கயிலையே
            எடுத்த வன்னெடு நீள்முடி பத்திறப்;
            படுத்த லும்மணஞ் சேரி யருள்எனக்
            கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

       பலம் பொருந்திய மேனியை உடைய அரக்கனாகிய இராவணன் கயிலைமலையை பெயர்த்து எடுத்தபோது, அவனுடைய நிண்ட முடிகள் பத்தும் நலியுறுமாறு அடர்த்து மேவிய ஈசனை, அவ்வரக்கன், திருமணஞ்சேரி ஈசனே அருள்வீராக என்று ஏத்த, ஈசனும் மனமிரங்கி அவ்வரக்கனுக்கு அரச வாளும் அளித்து, இராவணனுடைய பெயர் என்றும் நிலைக்குமாறும் அருள் புரிந்தார்.



திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment